கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செய்திகள் மாநிலம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, கொடநாடு வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த காவல்துறை, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்துவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது என்பதை சுட்டுக்காட்டியதோடு, மனுதாரர் மிரட்டப்பட போவதில்லை; தன் வழக்கறிஞருடன் ஆஜராகலாம், என்றும் தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் வழங்கியுள்ள தீர்ப்பில், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம். இதில் தவறு ஏதும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *