மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் பதவி ஏற்றார்

செய்திகள் தேசிய செய்திகள்

மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இன்று (ஆக.27) காலையில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவி ஏற்புவிழா நடந்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் குமார், இல.கணேசனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய பதவி ஏற்பு நிகழ்ச்சி 10 நிமிடத்தில் நிறைவடைந்தது. கவர்னராக பதவி ஏற்றதும் அவருக்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரென்சிங் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இன்று பதவி ஏற்பு விழாவில் இந்தியில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இல.கணேசனுக்கு தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் சரளமாக பேசத்தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *