சினிமாவுக்கு முழுக்குப் போடும் திரிஷா?

சினிமா

தமிழ் சினிமாவில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘சதுரங்க வேட்டை – 2,’ ‘ராங்கி,’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், திரிஷா புதிய திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ள திரிஷா, அதனால் தான் புதுப்பட வாய்ப்புகளை நிராகரிப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம், திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிறகு மீண்டும் திரிஷா நடிக்க வருவார், என்ற தகவலும் உலா வருகிறது.

பிரசவ காலத்தை தவிர, மற்ற நேரங்களில் நான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்று நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *