தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டு சென்றார்

செய்திகள் மாநிலம்

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.
இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த்தால் சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையான சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த சிகிச்சைக்கு பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது தைராய்டு பிரச்சனை, தொண்டையில் இன்ஃபெக்‌ஷன் மற்றும் சிறுநீரக பிரச்சனை ஆகிய பாதிப்பால் உடல் நிலை மோசமடைந்தது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சென்னையில் 10 நாட்கள், பின்பு சிங்கப்பூர் சிகிச்சை, அமெரிக்கா என பல சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பின்பு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் செல்கிறார் லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

அந்த பரிசோதனையின் அடிப்படையில் அவர் துபாயில் இருந்து சிகிச்சை பெறுவதா? அல்லது லண்டன் சென்று பயிற்சி மேற்கொள்வதா? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துபாய் செல்லும் விஜயகாந்துடன் அவரது அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் துபாய் சென்றனர்.

முன்னதாக துபாய் செல்லும் நபர்கள் கரோனா பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை இருப்பதால் விஜயகாந்த உட்பட அவருடன் துபாய் செல்லும் அனைவரும். பரிசோதனை எடுத்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *