மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை விரும்பும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும்

மாநிலம் செய்திகள்

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளரிடம் பேசியதாவது

நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பாதுகாப்பான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகள் கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினி திரவங்கள் அனைத்தும் தேவையான அளவிற்கு வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொற்று பரவும் குறித்த எந்தவித அச்சமும் படத்தேவையில்லை. பள்ளிகள் திறப்பதன் மூலம் இணையதளம் வாயிலாக பள்ளிகள் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது.
மாணவர்களை பள்ளிக்கு செல்வதை விரும்பும் அளவிற்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மாணவர்களை மிகவும் மகிழ்ச்சியான முறையில் ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும். 95 சதவிகிதம் பேர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அனைவரும் 100% தடுப்பு ஊசிகள் செலுத்தி கொள்வதற்கான பணிகள் கூடிய விரைவில் முடிக்கப்படும்.

நாளை 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் , தலைமை ஆசிரியர்கள் , முதன்மை கல்வி அலுவலர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை கள் எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். பள்ளிகளில் கூடுதல் மாஸ்க் , கை சுத்திகரிப்பான் வைத்துக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு மாணவர்கள் மீது உள்ள அக்கறையை போன்றே இந்த அரசுக்கும் மானவர்கள் மீது அக்கறை உள்ளது. 40 பேர் ஒரு வகுப்பறையில் இருக்கிற பட்சத்தில் 20 பேர் ஒரு வகுப்பறையில் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விளையாட்டு பாட வேலை இல்லை என்பதையும் கூறியுள்ளோம்.
800 மருத்துவர்கள் அரசு பள்ளிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளனர்.மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, தினமும் பதிவிட இருப்பதாக இங்கு தலைமை ஆசிரியர் கூறியுள்ளார் இதனை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்

பள்ளிகள் திறந்து 40 லிருந்து 45 நாட்கள் வரை , உளவியல் சிக்கல்களை போக்கும் வகையிலான பயிற்சிகளே மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. போட்டி தேர்வுகளை கருத்தில் கொண்டே பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *