பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சானோன் கூவில்

வர்த்தகம்

இந்தியாவின் நுண்வலை பதிவு தளமான கூவில் பாலிவுட் நடிகை கிருத்தி
சானோன் இணைந்த ஒரே வாரத்திற்குள், அவரை சுமார் 20,000 நபர்களுக்கு மேல்
பின்தொடர்ந்துள்ளனர். கூவில் @kritisanon எனும் பெயரில், தன் ரசிகர்களோடு
இணைந்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவரது இணை நடிகரும்
நண்பருமான டைகர் ஷெராஃப் மைக்ரோ பிளாக்கிங் தளமான கூவில் இணைந்து தனது
ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்போது கிருத்தி கூவுடன் இணைந்த பிறகு,
உடனடியாக அவரின் ரசிகர்கள், நான்கு ரசிகர் பக்கங்கள் உருவாக்கி பல சுவாரஸ்யமான
பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர் – @FAN_OF_KS, @Kriti_Sanon_FC, @kritsaffection,
@team_kritian. 


கிருத்தி சானோன் ’கூ’ ஆப் பயன்படுத்துவது குறித்து தனது அழகிய புகைப்படத்துடன் மற்ற
சமூக ஊடக தளங்களில், தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். சமீபத்தில், அவர் பகிர்ந்த ஒரு
அழகான புகைப்படம் 1,700 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றது. கூஆப் மூலம் பல
இந்திய மொழிகளில் தனது ரசிகர்களுடன் கிருத்தி சானோன் இணைய இருக்கிறார். 
கிருத்தி சானோன், இளம் நடிகர்களில் ஒருவராக புகழ் பெற்று, தனது தெளிவான திட்டங்கள்
மற்றும் திரைக்கதைகளால் மக்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் OTTயில் வெளியான
மிம்மி திரைக்கதை சூப்பர் ஹிட் அடித்தது. அவரது நடிப்புக்காக விமர்சகர்களிடமிருந்து
பாராட்டுக்களைப் பெற்றார். கிருதி தற்போது பிரபாஸ் மற்றும் சன்னி சிங் ஆகியோருடன்
இணைந்து பணியாற்றி வருகிறார். மற்றும் ஆதிபுருஷின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. 

கூ ஆப்பை பதிவிறக்கம் செய்வது எப்படி: மொபைல் ஆப் ஸ்டோரில், பயனர்கள் கூஆப்பை
டவுன்லோட் செய்துக் கொள்ளலாம். பயனர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல்
போதுமானது. பதிவு முடிந்தவுடன், அவர்கள் தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள், விளையாட்டு
வீரர்கள், அரசியல்வாதிகள், பொழுதுபோக்கு கலைஞர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்களை
கூவில் பின்தொடரலாம். கூவில் ஒரு பதிவை ஒரே நேரத்தில் இந்தியாவின் அனைத்து
மொழிகளிலும் அந்தந்த மொழி மக்களுக்கு, அவர்கள் மொழியில் உங்கள் பதிவுகளை நீங்கள்
கொண்டு சேர்க்க முடியும். 
கூஆப் பற்றி : கூ இந்திய மொழிகளில் மைக்ரோ-பிளாக்கிங் தளமாக மார்ச் 2020 இல்
நிறுவப்பட்டது. பல இந்திய மொழிகளில் செயல்படுகிறது, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில்
உள்ள மக்கள் தங்கள் தாய் மொழியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திக்கொள்ள
உதவுகிறது. இந்தியாவில் வெறும் 10% ஆங்கிலம் பேசும் நாட்டில், இந்திய பயனர்களுக்கு
ஆழமான மொழி அனுபவங்களை வழங்கி அவர்களை இணைக்க உதவும் ஒரு சமூக ஊடக
தளத்திற்கு ஆழ்ந்த தேவை உள்ளது. இந்திய மொழிகளை விரும்பும் இந்தியர்களின்
குரல்களுக்கு ‘கூ’ சிறந்த ஒரு மேடையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *