“கிளாப்” படத்தின் டீசர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா

BIG PRINT PICTURES நிறுவன I B கார்த்திகேயன் தயாரிப்பில், பிரித்வி ஆதித்யா எழுத்து மற்றும் இயக்கத்தில், ஆதி நடிக்கும் “கிளாப் “ திரைப்படத்தின் டீசருக்கு 1 Million Views வரவேற்பு கிடைத்துள்ளது.

BIG PRINT PICTURES நிறுவனத்தின்  IB கார்த்திகேயன் தயாரிப்பில், ஆதி  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “கிளாப்” படத்தின் டீசர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  ஆதி உடைய திறமையான நடிப்பும், பிரித்வி ஆதித்யா உடைய திறமையான எழுத்தினாலும் உருவான கிளாப் படத்தின் 70 நொடிகள் அடங்கிய டீசர், அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார உணர்ச்சிகளை  சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிகர்கர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. ஆனால் படக்குழுவினரே வியந்து பார்க்கும்படி, இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது, படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் நடிகர் அமிதாப்பச்சன் நடிகை ஆகான்ஷாவின் திறமையான நடிப்பை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

BIG PRINT PICTURES நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் கூறியதாவது…

நடிகர் அமிதாப்ஜிக்கு பெரும் நன்றியை  தெரிவித்து கொள்கிறோம்.  இந்தியாவின் பெரிய நட்சத்திரத்திடமிருந்து கிடைக்கும்போது பாராட்டும் மிகப்பெரியதாகவே இருக்கிறது.  எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி “கிளாப்” படத்திற்கு  பெரிய அளவில்  வரவேற்பு கிடைத்து வருகிறது. தீவிர நோய் தொற்றால் உலகமே முடங்கிய நிலையில்,  இந்தப் படமும் பல பிரச்சினைகளை சந்தித்தது. அவையனைத்தையும் கடந்து,  இப்போது படத்திற்கு  கிடைத்தவரும் மதிப்பும் பாராட்டும் மனதிற்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் களங்கள் விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் மட்டுமே. அந்த வகையில் , “கிளாப்” திரைப்படம் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், திரைப்பட பிரபலங்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றதில் மகிழ்ச்சி, அதிலும் இந்திய சினிமாவின் பேரரசர் – அமிதாப் பச்சன் அவர்கள் பாராட்டியது படக்குழுவினருக்கு உட்சபட்ச மகிழ்ச்சியை தந்துள்ளது  இயக்குனர் பிரித்வி ஆதித்யா தன்னுடைய மூலக்கதையை திரைவடிவில் மிகவும் அருமையாக படமாக்கியுள்ளளார். “கிளாப்” திரைப்பட டீஸர் சிறந்த வரவேற்பை பெற்றது எனக்கு தனிப்பட்ட வகையில் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. குறிப்பாக தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரவேற்பை பெற்றுள்ளது.    ஆதியின் நடிப்பு திறமை  மென்மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறது மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படம் வெளியான பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அவர் நடசத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும் என்பதை நான் நம்பிக்கையோடு கூறுகிறேன். இந்தப் படத்திற்கு மேலும் பன்மனடங்கு பலம் சேர்க்கும் விதமாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அமைந்துள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடித்த வகையில் எல்லோரையும் திருப்திபடுத்தும் படமாக இருக்கும்

கிளாப்”  படத்தின் இசை டிரெய்லர் மற்றும் தியேட்டர் வெளியீடு குறித்து, தயாரிப்பு தரப்பு  விரைவில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை  வெளியிடவுள்ளது. இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் தயாரிக்கிறார், படத்தின் இணை தயாரிப்பாளராக P. பிரபா பிரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா பணியாற்றுகின்றனர் நடிகர் ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *