விவாதத்தில் புள்ளி விவரத்துடன் பேச கணினி உதவியது ” – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

செய்திகள் மாநிலம்

அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து இணையதளம் மூலமாக கோப்புகளை கையாண்டு பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கும் விதமாக e-office எனும் மின் அலுவலக பயிற்சி வகுப்பு அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வழங்கப்படும் இப்பயிற்சி வகுப்பு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு இன்று தொடங்கியது. 120 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பினை அண்ணா சாலை செங்கல்வராயர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார் , தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

வரலாறு , தொழில்நுட்பம் படித்தோருக்கு இங்கிலாந்தில் முதன்முறையாக நடைபெற்ற தொழிற்புரட்சி பற்றி தெரியும். நீராவி தொழில்நுட்பம் அரசி அரைக்க , துணி உற்பத்திக்கு உதவியது.பின்னர் ரயில்வேக்கு உதவியது. மின்சாரம் வந்தபிறகு தொழில் புரட்சி மேம்பட்டது.

1980..1990 களில் தொழிற் புரட்சி மூலம் கணினி அறிமுகமான நிலையில் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து வந்தேன். தகவல் தொழில்நுட்பத்தின் பயன் முழுமையாக தெரிந்தவன் நான். சமூக வலைதளங்கள் மட்டும் ஐடி அல்ல..என்று கூறி அனைத்து கட்டமைப்புகளுடன் திமுகவில் ஐடி -விங்கை உருவாக்குமாறு கூறினேன்.

அமைச்சரான எனக்கு வரக்கூடிய கோப்புகளை ஒவ்வொன்றாக படித்து பார்த்து கையெழுத்திட நினைத்தால் அதற்குள் ஆட்சி காலம் முடிந்துவிடும். எனவே
தகவல் நிரந்தராமக அழியாமல் இருக்க கணினி பயன்பாடு அவசியம்.

இ-பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக முடிவெடுத்த பிறகு கணிணி மூலம் தாக்கல் செய்வதா , கையடக்க கணினி மூலமாக தாக்கல் செய்யலாமா என விவாதம் நடந்தது. நான் டேப்லட் போதும் என்றேன். பாதுகாப்பு காரணத்தால் அரங்கில் ஜாமர் இருப்பதால் கணினியில் தரவுகளை ஏற்றி அங்கு பயன்படுத்துவது கடினம் என்றார்கள். அவையில் பயன்படுத்திய டேப்லட்களை பயன்படுத்தி எம்எல்ஏ அலுவலகங்களில் இ-சேவை மையம் தொடங்கலாம் என கூறினேன். கணினியின் அருமை கூட்டத் தொடரின்போதுதான் புரிந்துள்ளது. அவை மேஜையில் முன்பெல்லாம் ஒவ்வொரு எம்எல்ஏ முன்பும் 300 -500 புத்தகம் வைக்கப்படும் . அதை யாரும் பெரிதாக படிப்பதில்லை. இப்போது அவையில் கணினியை வைத்த பிறகு , வரலாற்றில் இல்லதளவு அதகபட்ச தகவல் உறுப்பினர்களின் கைக்கே வந்து விட்டது , விவாதத்தில் தகவல்களுடன் பேச உதவுகிறது.

1992 ல் உலகின் சிறந்த வங்கி ‘சிட்டி வங்கி’. அதன் உலகளாவிய அனைத்து கிளைகளின் விவரங்களும் ஒரே கணினியில் இருந்தது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் வரி 3 ரூபாய் குறைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என தெரிந்து கொள்ளவதற்கான தகவலை பெறுவது கடினமாக இருந்தது. காரணம் வரி வருவாய் குறித்த தகவல் கணினியில் இல்லை. பின்பு ஆகஸ்ட் 1 முதல் 13 வரை எண்ணெய் விற்பனை குறித்து தகவலை திரட்டினோம். அனைத்து வகை நிர்வாக மேலாண்மைக்கும் கணினி அவசியம் , குறிப்பாக தலைமைச் செயலகத்தில். இல்லை என்றால் அரசு அலுவலர்களைவிட அரசியல்வாதிகளுக்கு பெரும் பதிப்பு ஏற்பட்டுவிடும்.

இந்தியளவில் சிறந்த மாநிலமாக உள்ள தமிழகத்தை மேலும் முன்னிலைக்கு கொண்டுவர இந்த திட்டம் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *