சென்னையை அடுத்த ஈசிஆர் சாலையில் உள்ள ப்ளூ ஏஞ்சல் உல்லாச விடுதியில் மிஸ்டர் அண்ட் மிஸ் போட்டோஜனிக் 2021 அழகி போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சினிமா கலைஞர்கள் குட்டி கோபி(நடிகர்), சுரேஷ்நடராஜன்(ஒளிப்பதிவாளர்), நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார், நடிகர் பிரித்திவிராஜ், நடிகை தேவந்தி யோகநாதன், ஜேம்ஸ் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றவர்கள் கொண்டவர்களை ஊக்குவித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அழகை மட்டும் வைத்து வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்காமல் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகளுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது.
இந்தப் போட்டியின் மூலம் வந்த தொகையை கொரோனா நிவாரணமாக மக்களுக்கு நேரடியாக செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்வு எஃப்.எஸ்.கிரியேட்டர்ஸ் சியா ஸ்ரீ, மற்றும் ஷில்பா ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த அமைப்பினர் 35 நிகழ்ச்சிகளை இதுவரை சிறப்பாக நடத்தி உள்ளனர் மேலும் ஏழு உலக சாதனை படைத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ருமேஷ் இரண்டாம் பரிசு அபிஷேக் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் பரிசு ஜாய் ஜெஸ்லின்,இரண்டாம் பரிசு நந்தினி பிராயகாய் பெற்றுள்ளனர்.
டைட்டில் ஸ்பான்சராக யோகா குரூப், அசோசியேட் ஸ்பான்சர் சொலா குரூப் இருந்தனர்.