‘ருத்ரதாண்டவம்’ யார் மனதையும் காயப்படுத்தாத, அனைவருக்குமான படம்‘டத்தோ’ ராதாரவி.

சினிமா

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர்  ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில்  இன்று  நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ்  உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,” 

இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை. இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன்ஜி என்னை சந்தித்தார். நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார்.
நான் டப்பிங் யூனியன் தலைவராக பணியாற்றி வருகிறேன்/ தற்போது திரையுலகில் பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் உறுப்பினர்களாக சேர்க்க சொல்லி என்னை சந்திக்கிறார்கள். அவர்களும் டப்பிங் யூனியனில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்/ ஏனெனில் இவர்களுக்கு சினிமாவைத் தவிர வேறு தொழில் தெரியாது.
படத்திற்கு இசை அமைப்பாளர் ஜுபின் எனக்கு புதியவர். படக்குழுவினருக்கு நண்பராக பழகியவர். இந்த படத்திற்கு அவர் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். நான் இதற்குப் பிறகு ஏதேனும் படத்தை தயாரிக்கும் எண்ணம் இருந்தால்… அவரை இசையமைப்பாளராக பயன்படுத்துவேன்.படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்ட வேண்டும் என்றால் குறிப்பாக கலை இயக்குனரை பாராட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக நீதிமன்ற காட்சிகளுக்கான அரங்கத்தை அவர் வடிவமைத்திருந்தது மிகச் சிறப்பாக இருந்தது. படபிடிப்புத் தளத்தில் இயக்குநரிடம் ஒரே ஒரு வசனத்தை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன் அவரும் அதனை ஒப்புக் கொண்டு, அந்த வசனத்தைப் பேச அனுமதித்தார்.
இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். உண்மையில் நமக்கெல்லாம் இது பெருமையாக தான் இருக்கும். எனக்கு இவர் தான் தலைவர் என சொல்லும் அனைவருக்கும் இந்த படம் பெருமையாக இருக்கும். இயக்குநர் மோகன்ஜி இந்த படத்தை குறிப்பிட்ட அந்த தலைவருக்காக எடுத்தது போல் இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்ட வேண்டும். திருந்த வேண்டும். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம். படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃ தே டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நான் வணங்கும் தலைவர்களில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அவர் இந்தியாவிற்கான அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். அவர் ஒரு ஜாதிக்காக இதனை செய்யவில்லை. இதை சொல்வது தான் ருத்ர தாண்டவம் படம். மலையாள திரை உலகில் படைப்பாளிகளும், திரைக்கதை ஆசிரியர்களும் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ… அதை அவர்களால் உறுதியாகவும், துணிச்சலாகவும் செல்ல முடியும். அது போன்றதொரு நிலை தமிழகத்தில் இல்லை. இங்கு ஒரு காட்சியில் பின்னணியில் நிற்பவர்களால் கூட அரசியலாக்கப்படுகிறது. நான் ஒரு திறமையான நடிகன் இதனை சொல்லி சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டேன் இனிமேல் சொல்வதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். ஏனெனில் திரை உலகில் காகித பூக்களுக்கு தான் மரியாதை. உண்மையான வாசம் வீசும் மலருக்கு மரியாதை கிடைப்பதில்லை. ஊடகவியலாளர்கள் நினைத்தால் நன்றாக இருக்கும் ஒருவரை கூட ஆட்டோ சங்கர் ஆக மாற்றிவிட முடியும் நீங்கள் நினைத்தால் ஆட்டோ சங்கரை கூட சாய்பாபாவாக மாற்றிவிட முடியும். எனவே இப்படத்தை பற்றி எழுதி ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ‘என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *