அடையாளமற்ற மூன்றாம் பாலினத்தாருக்கு தமிழக அரசு ஆதரவு

செய்திகள்

இன்றைய பொது முடக்கத்தால் அன்றாட தேவைகளுக்கே மிகவும் போராடும் சமூகங்களில் ஒன்றாக, ரேஷன் கார்டுகளும் அடையாள அட்டைகளும் இல்லாத மூன்றாம் பாலினத்தாரை எளிதில் அடையாளம் காட்ட முடியும்.

கோவிட் நிவாரணம் மற்றும் ஆதரவு தொடர்பான சிறப்பு நோடல் அதிகாரி, டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் திரு. மேகநாத் ரெட்டி ஐ.ஏ.எஸ்., ஆயா இருவரும் சென்னையில் கடுமையான சங்கடங்களுக்கு உள்ளாகியிருக்கும்  திருநம்பிகளுக்கும் திருநங்கைகளுக்கும் தங்கள் ஆதரவு கரத்தை  நீட்டியுள்ளனர். இந்த முயற்சியின் முக்கிய பயனாளிகளாக ரேஷன் கார்டு அல்லது பாலின அடையாள அட்டைகள் இல்லாத திருநம்பிகளும் திருநங்கைகளும் ஆவர்.

அதிதி மதுசூதன், ‘பார்ன்2வின்’ அறக்கட்டளையைச் சேர்ந்த ஸ்வேதா சுதாகர் ஆகியோர் அடையாள அட்டைகள் இல்லாத திருநம்பி-நங்கை சமூகத்தை சேர்ந்த சுமார் 350 பயனாளிகளை அடையாளம் கண்டு, உலர் ரேஷன் தொகுப்புகளை அரசின் உதவியோடு விநியோகித்துள்ளனர்.

மேலும் இந்த விநியோகம் கொரோனா பாதிப்புக்குள்ளான காசிமெடு, பெரம்பூர், சைதாபேட்டை போன்ற பகுதிகளில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பார்ன்2வின் அறக்கட்டளை அதிதி மதுசூதன் ,டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ. மேகநாத் ரெட்டி ஐ.ஏ.எஸ் அவர்களின் மதிப்புமிக்க ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *