ஸ்டோரிடெல் ஆடியோ புத்தகத்திற்கு முதல் முறையாக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்துள்ளார்

செய்திகள்

ஸ்டோரிடெல் ஆடியோ இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக வெளியாகி இருக்கும்
கல்கியின் எஸ்.எஸ் மேனகாவிற்கு, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கெளதம் வாசுதேவ்
மேனன் குரல் தந்திருக்கிறார். ”கல்கியின் கதை சொல்லும் மொழி புலமையை ரசித்தேன்.
அதனால், இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என கெளதம் வாசுதேவ் மேனன்
தெரிவித்திருக்கிறார்.
எஸ்.எஸ் மேனகா பற்றி:
மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் எஸ்.எஸ் மேனகா, தமிழ் இலக்கியங்களில்
முக்கியமான சிறுகதைகளில் ஒன்றாகும். இந்த சிறுகதைகளின் சிறப்பம்சம் என்னவென்றால்,
சமகாலத்திற்கும் பொருந்தும் வகையில் கதைகளம் கொண்டதாக இருக்கின்றன.
பயணப்படுவர்களை கதை மாந்தர்களாக கொண்ட எஸ்.எஸ் மேனகாவில், படிப்பவர்களையும்
உடன் அழைத்து செல்லும் வகையில் கதை சொல்லப்பட்டிருக்கும். பிரிந்த காதலர்கள் மீண்டும்
சேர்ந்தார்களா என்பதே எஸ்.எஸ் மேனகா!
 
ஜிவிஎம் பற்றி:
1973-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பிறந்த கெளதவ் வாசுதேவ் மேனன், இந்தியாவின்
முன்னணி இயக்குனர்களில் ஒருவர். ஜிவிஎம் என்றும் அழைக்கப்படும் அவர், தயாரிப்பாளரும்
கூட. தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
தமிழில், மின்னலே (2001), வாரணம் ஆயிரம் (2008), விண்ணைத்தாண்டி வருவாயா (2010),
காக்க காக்க (2003), வேட்டையாடு விளையாடு (2006), என்னை அறிந்தால் (2015) ஆகிய
வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். இதில், வாரணம் ஆயிரம் தேசிய விருதை
வென்றிருக்கிறது. மேலும், ஃபோட்டோன் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும்
அவர், தங்கமீன்கள் (2013) படத்தை தயாரித்தார். கேரள மாநிலம் பாலகாடு பகுதியைச் சேர்ந்த
ஜிவிஎம், சென்னை அண்ணா நகரில்தான் தன்னுடைய சிறு வயது காலத்தை கடந்திருக்கிறார்.
புதுக்கோட்டை மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
படிப்பை முடித்துவிட்டு சினிமா துறையில் அறிமுகமானார்.
ஸ்டோரி டெல் பற்றி:
2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டோரிடெல் நிறுவனம், ஸ்டாக்ஹோமை தலமை இடமாக
கொண்டு செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில்
ஸ்டோரிடெல் இயங்கி வருகிறது. மேலும் விவரங்களுக்கு, www.storytel.com/in  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *