ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊடக கண்காணிப்புக் குழுவின் முதல் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27.07.2020 ல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து சுதந்திரத்தை காக்கும் பொருட்டும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அரசியல் நடுநிலைமையை கண்காணித்திடவும், ஆண் பெண் இருபால் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்களின் கருத்து பரிமாற்றக் கருவியான சமூக ஊடகத்தில் ஆக்கப்பூர்மாக கருத்து பதிவிடும் இளைஞர்ககளுக்கு ஏற்படும் மிரட்டல்களை, இன்னல்களைத் தவிர்க்கும் பொருட்டும் அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்புக் குழுவின் முதல் காணொலி கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருமதி.அருள்மொழி கோபண்ணா, மல்லை சத்யா, கனகராஜ், சி.மகேந்திரன், ரவிக்குமார் எம்.பி., அப்துல் ரஹ்மான்,அப்துல் சமது, சூர்யமூர்த்தி மற்றும் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
“1. பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தனிநபர் தாக்குதலைத் தொடுக்கும் சமூக விரோதிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை மாறாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின் பின்புலத்தோடு யாரேனும் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பாரபட்சப் போக்கை கைவிட வேண்டும்.