ஆரம்பமானது மாய பித்து நிலை “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” (DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS) படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியீடு !

சினிமா

உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயதுடிப்பை எகிற வைத்திருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னெஸ்” (DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS) படத்திலிருந்து புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் நிகழ்கால உலக சினிமா சரித்திரத்தையே மாற்றி எழுதி வருகிறது. மார்வல் ஸ்டூடியோஸிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு திரைப்படமும், உலக சினிமா சரித்திரத்தில் பெரும் சாதனைகள் படைத்து வருகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மற்றும் சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படங்களுக்கு பிறகு விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்” (DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS) படத்திற்கு மிக பயங்கரமான எதிர்பார்ப்பு நிகழ்கிறது.

உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை மயக்கியிருக்கும் இந்த மார்வல் திரைப்படத்திற்கு இந்தியாவில் இப்போதே மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியான வேகத்தில் உலகமெங்கும் வைரலாகி வருகிறது.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படத்தின் இந்த புதிய புரோமோ வீடியோ, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும், வாண்டா கதாப்பாத்திரங்களின் இருன்மையை காட்டுவதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையையும் காட்டுகிறது.

பெனடிக்ட் கம்பெர்பாட்ச், சிவெட்டல் எஜியோஃபர், எலிசபெத் ஓல்சன், பெனடிக்ட் வோங், சோசிட்டில் கோம்ஸ், மைக்கேல் ஸ்டூல்பர்க் மற்றும் ரேச்சல் மெக் ஆடம்ஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் சாம் ரெய்மி இயக்கியுள்ளார்.

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” (DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS) திரைப்படம் மே 6 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் புதிய புரோமோ வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=zLQZa_n7H_0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *