விவசாயிகளுக்கு துரோகம் செய்த அதிமுக – அமைச்சர் தங்கம் தென்னரசு விலாசல்

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களின் வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. சட்டப்பேரவையில், வேளாண் சட்ட […]

Continue Reading

யாருக்கு முதலில் திருமணம்! – அடிதடியால் முருகன் கோவிலில் பரபரப்பு

ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக இன்று பிரதோ‌ஷம், வரலட்சுமி நோன்பு, சுப முகூர்த்த நாள் ஆகியவை ஒரேநாளில் வருவதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்திலுள்ள கோவில்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 22 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கோவில்கள் […]

Continue Reading

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை! – சோழவரத்தில் பரபரப்பு

சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சிலரம்பரச்ன் என்பவர், அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு சுமார் 11 மணியளவில் சிலம்பரசன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் […]

Continue Reading

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம்! – அச்சத்தில் மக்கள்

நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை படிபடியாக உயரத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.25 உயர்த்தப்பட்டது. இதன் மூலம், சென்னையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக விற்கப்படுகிறது. மேலும், ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை இதுவரை ரூ.265 ஆக அதிகரித்திருப்பது மக்களை கவலை அடைய செய்திருக்கிறது. இப்படி, சமையல் கேஸ் சிலிண்ட விலை ஏற்றம் தொடர்ந்துக் கொண்டிருப்பதால், பெட்ரோ விலை எப்படி லிட்டர் 100 ரூபாயை தாண்டியதோ, அதுபோல் சமையல் […]

Continue Reading

ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள உள்நாட்டு போரில், தலிபான்கள் கை ஓங்கி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் ஆட்சியை அவர்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் முன்னேறினர். முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. இன்று காபூல் நகருக்குள் […]

Continue Reading

இளைஞரை காலால் உதைத்த போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்

காவலர்களிடம் அநாகரீகமாக நடந்துக் கொள்ளும் பொது மக்களின் செயல்களை வீடியோ எடுக்கும் காவல்துறையினர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவதோடு, அந்த வீடியோ ஆதாரத்தின் மூலம், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்கின்றனர். அதேபோல், பொதுமக்களிடம் மோசமாக நடந்துக் கொள்ளும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரும்பாக்கத்தில் கடையில் வேலை செய்யும் சபீர் என்ற இளைஞரை மாஸ்க் அணியவில்லை என்பதால், பெரும்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ காலால் உதைத்திருக்கிறார். இந்த சம்பவம் […]

Continue Reading

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு!

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆனையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒரு கல்வி ஆண்டு என்பது பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்கும். அதில் வேலை நாட்கள் என்பது 210 நாட்கள். அதில் 136 நாட்கள் கற்பித்தலுக்கான நாட்களாக இருக்கும். கடந்த 2020-21ம் கல்வி ஆண்டில் […]

Continue Reading

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது – அண்ணாமலை

ஆறு மாதத்திற்கு பிறகு தான், திமுக ஆட்சியின் செயல்பாடு குறித்து முழுமையாக பேச முடியும் என்றும், ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 75வது சுதந்திர தின பாஜக லோகோவை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு பா.ஜ.க 75வது சுதந்திர தின விழாவை மகிழ்ச்சி திருவிழாவாக கொண்டாட இருக்கிறது. […]

Continue Reading

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு

தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நான் ஒன்றுக்கு ரூ.5000 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ.15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ.7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Continue Reading

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட சுமார் 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். சென்னை எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த வேலுமணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் விடுதி முன்பு திரண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், கோவையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு இடையூராக எம்.எல்.ஏ-க்களும், தொண்டர்களும் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]

Continue Reading

பழங்குடியின மக்களுக்காக கட்டணம் இல்லாத தொலைபேசி எண் அறிமுகம்

சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி ஆதிதிராவிடர் நல சங்கம் மற்றும் நாவா அமைப்பின் மூலம் கட்டணமில்லாத தொலைபேசி இணைப்பு மூலம், (Tribal Help Line) பழங்குடியின மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க 1800 4251 576 கட்டணமில்லா தொலைபேசி எண் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ், இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Continue Reading

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பப்ஜி மனு வழக்கு!

யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மதன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு, குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன், தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில் நாளைக்கு […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி பற்றி வெளியான மற்றொரு அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியுள்ள நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்று கூறப்படுகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதாஇ தற்போதுள்ள தடுப்பூசிகள் தடுக்காது, என்று பிரிட்டன் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், தடுப்பூசி மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களிடம் அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Continue Reading

சமூகவலைதளம் மூலம் வரும் நண்பர்களால் ஏற்படும் ஆபத்து!

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல நல்ல விஷயங்களுக்கு உதவியாக இருக்கும் இந்த சமூக வலைதலங்கள், பலருக்கு உபத்தரமாகவும் அமைந்து வருகிறது. அந்த வகையில், சமூகவலைதளம் மூலம் நண்பர்களாகும் பெண்கள் சிலர், ஆபாச வீடியோ கால் மூலம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதும், அதில் சிக்கி பலர் பணத்தை இழந்து வருவதும் அதிகரித்து வருகிறது. சமூகவலைதளம் மூலம் நண்பர்கள் அழைப்பு கொடுக்கும் பெண்கள் சிலர், பிறகு வீடியோ கால் […]

Continue Reading

தங்கம் விலை – சவரனுக்கு ரூ.40 குறைந்தது

கொரோனா காலத்திலும் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதாக, உலக தங்க வர்த்தக அமைப்பு சமீபத்தில் அறிவித்திருந்தது. இடையடுத்து தமிழகத்தில் கடந்த பல நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,526-க்கும், ஒரு சவரன் ரூ.36,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.30 க்கு விற்பனையாகிறது.

Continue Reading

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை! – விரைவில் புதிய சட்டம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும், என்று தமிழகத்தில் பலர் கூறி வந்த நிலையில், தற்போடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது இந்த கருத்தை சட்டசபையில் வலியுறுத்தினார். இதையடுத்து தமிழக அரசும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றியது. ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ”இந்த விளையாட்டுகளை ஏன் தடை செய்ய வேண்டும் என்ற சரியான […]

Continue Reading

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மு.கருணாநிதியின் உருவப்படம் திறப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

Continue Reading