விவசாயிகளுக்கு துரோகம் செய்த அதிமுக – அமைச்சர் தங்கம் தென்னரசு விலாசல்

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களின் வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. சட்டப்பேரவையில், வேளாண் சட்ட […]

Continue Reading

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! – 3 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

மதுரையில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் தமிழகத்தின் நீளமான பறக்கும் பாலத்தில், நாராயணபுரம் அருகே ஒரு பகுதி பால கான்கிரீட் கர்டர் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இதில் உ.பியை சேர்ந்த ஒரு தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் பொருத்தும் பணி, ஹைட்ராலிக் இயந்திரம் பொருத்திய ராட்சத கிரேன் மூலம் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்ததில், பால கான்கிரீட் கர்டர் பயங்கர […]

Continue Reading

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கடந்த அதிமுக ஆட்சியால் விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து சட்டமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தி, கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியவர் ஜெயலலிதா. அதன் மூலம்தான் […]

Continue Reading

ஆச்சரியமான தகவல், ஆனால் உண்மை – ரூ.87-க்கு வீடு விற்பனை!

சொந்த வீடு என்பது அனைத்து மக்களின் பெரும் கனவுகளில் ஒன்று. ஆனால், இந்த கனவு பலருக்கு வெறும் கனவாகவே இருந்து விடுகிறது. காரணம், நம் நாட்டில் வீடு அல்லது நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்றால், பல லட்சங்கள் செலவாகும். ஆனால், ஒரு நாட்டில் வெறும் ரூ.87-க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தகவல் மிக ஆச்சரியமாக இருந்தாலும், உண்மை. ஆம், இத்தாலி நாட்டில் ஒரு வீடு வாங்க வெறும் ரூ.87 இருந்தால் போதும். இத்தாலியின் […]

Continue Reading

கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி! – மெரீனா கடற்கரையில் திரண்ட மக்கள்

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 4 மாதங்களாக தமிழகம் முழுவதும் கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து, இன்று காலையிலேயே சென்னை மெரீனா கடற்கரையில் மக்கள் திரண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்று காலையில் உற்சாகமாக மணல் பரப்பில் கால் பதித்து விளையாடினார்கள். பலர் குடும்பத்தோடு வந்திருந்து காலையிலேயே கடற்கரை மணலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். இதேபோன்று பூங்காக்களிலும் இன்று முதல் […]

Continue Reading

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம்! – அச்சத்தில் மக்கள்

நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை படிபடியாக உயரத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.25 உயர்த்தப்பட்டது. இதன் மூலம், சென்னையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக விற்கப்படுகிறது. மேலும், ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை இதுவரை ரூ.265 ஆக அதிகரித்திருப்பது மக்களை கவலை அடைய செய்திருக்கிறது. இப்படி, சமையல் கேஸ் சிலிண்ட விலை ஏற்றம் தொடர்ந்துக் கொண்டிருப்பதால், பெட்ரோ விலை எப்படி லிட்டர் 100 ரூபாயை தாண்டியதோ, அதுபோல் சமையல் […]

Continue Reading

வைபை மூலம் இலவச இணைய சேவை! – பெற வேண்டிய வழி இதோ

சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக நகரின் பல்வேறு இடங்களில் 49 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கம்பங்களில் உள்ள ‘வைபை’ தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் இலவச வைபை வசதி பெறுவதற்கு தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் இலவச வைபை இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 […]

Continue Reading

ஹைதி நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1297 ஆக உயர்வு

ஹைதி நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால், பலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஹைதி நாட்டில் நிலநடுக்கத்தால் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 1297 ஆக அதிகரித்துள்ளது. பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான நடிகர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் வாகை சந்திரசேகருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Continue Reading

ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள உள்நாட்டு போரில், தலிபான்கள் கை ஓங்கி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் ஆட்சியை அவர்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்து தலைநகர் காபூலை குறிவைத்த தலிபான்கள் முன்னேறினர். முதலில் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை. இன்று காபூல் நகருக்குள் […]

Continue Reading

வேளாண் பட்ஜெட் நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸின் பவன் குமார் அறிக்கை

வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம், என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து […]

Continue Reading

இளைஞரை காலால் உதைத்த போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்

காவலர்களிடம் அநாகரீகமாக நடந்துக் கொள்ளும் பொது மக்களின் செயல்களை வீடியோ எடுக்கும் காவல்துறையினர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவதோடு, அந்த வீடியோ ஆதாரத்தின் மூலம், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்கின்றனர். அதேபோல், பொதுமக்களிடம் மோசமாக நடந்துக் கொள்ளும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரும்பாக்கத்தில் கடையில் வேலை செய்யும் சபீர் என்ற இளைஞரை மாஸ்க் அணியவில்லை என்பதால், பெரும்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ காலால் உதைத்திருக்கிறார். இந்த சம்பவம் […]

Continue Reading

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு!

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆனையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒரு கல்வி ஆண்டு என்பது பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்கும். அதில் வேலை நாட்கள் என்பது 210 நாட்கள். அதில் 136 நாட்கள் கற்பித்தலுக்கான நாட்களாக இருக்கும். கடந்த 2020-21ம் கல்வி ஆண்டில் […]

Continue Reading

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி!

இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – முன்னாள் அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபதி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன், பொள்ளாச்சி நகர அப்போதைய அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, […]

Continue Reading

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு

தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தீவிரம் இல்லாத கொரோனா சிகிச்சைக்கு நான் ஒன்றுக்கு ரூ.5000 என்று நிர்ணயம் செய்துள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ.15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ.7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Continue Reading

ஓணம் பண்டிகை கொண்டாட தடை!

கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்ற அச்சம் இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. அதே சமயம், மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் ஓணம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடுவதற்கும், கூட்டம் சேருவதற்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (ஆக.12) முதல் அமலுக்கு […]

Continue Reading

இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டில் கோளாறு!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமி கண்காணிப்புக்காக புதிய செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. ஈ.ஓ.எஸ்.03 2,268 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளை ‘ஜி.எஸ்.எல்.வி.எப்-10’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று (ஆக.12) அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி.எப்-10’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், மூன்றாவது நிலையில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் செயற்கை கோளை கொண்டு செல்லும் […]

Continue Reading

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட சுமார் 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். சென்னை எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த வேலுமணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ மற்றும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் விடுதி முன்பு திரண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், கோவையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு இடையூராக எம்.எல்.ஏ-க்களும், தொண்டர்களும் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]

Continue Reading

சென்னைக்கு ஆபத்து! – நாசா வெளியிட்ட எச்சரிக்கை

காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது. அதில், 2100 ஆம் ஆண்டுக்குள் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள 12 நகரங்கள் […]

Continue Reading