பெண் போலீசை கொலை செய்த கணவர்! – விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் பானுப்பிரியா. இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயது என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, விக்னேஷ் மதுரையில் பணியாற்றுவதால், மதுரையில் குடியேற விரும்பினார். ஆனால், பானுப்பிரியா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி […]

Continue Reading

யாருக்கு முதலில் திருமணம்! – அடிதடியால் முருகன் கோவிலில் பரபரப்பு

ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக இன்று பிரதோ‌ஷம், வரலட்சுமி நோன்பு, சுப முகூர்த்த நாள் ஆகியவை ஒரேநாளில் வருவதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்திலுள்ள கோவில்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 22 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கோவில்கள் […]

Continue Reading

சட்டசபை கூட்டத்திற்கு 3 நாட்கள் விடுமுறை

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. 16 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாளை மொகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை தினம் என்பதால் சட்டசபை கூட்டம் கிடையாது. அதற்கு அடுத்த நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் […]

Continue Reading

திருச்சி சிறப்பு முகாமில் 16 பேர் தற்கொலை முயற்சி!

பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அகதிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்தவர்கள் 60-க்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை தண்டனை காலம் முடிந்தும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளனர் என்றும் இலங்கை அகதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த […]

Continue Reading

சிறையில் ஒரு நாள் தங்க ரூ.500 கட்டணம்! – எங்கு தெரியுமா?

சிறையில் ஒரு நாள் முழுவதும் கைதியாக தங்குவதற்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சுவாரஸ்ய சம்பவங்கள் வெளிநாடுகளில் நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு, நம் நாட்டில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார்கள். ஆம், கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா சிறை உள்ளது. இந்த சிறையில் தான், ரூ.500 செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை சிறை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர். இதற்காக கர்நாடக மாநில அரசின் அனுமதிக்காகவும் அவர்கள் காத்துக் […]

Continue Reading

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை! – சோழவரத்தில் பரபரப்பு

சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சிலரம்பரச்ன் என்பவர், அதிமுக கிளை செயலாளராக இருந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு சுமார் 11 மணியளவில் சிலம்பரசன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் […]

Continue Reading

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கு – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மத்திய அரசால் மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை, என்று தெரிவித்தவர், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டால் தென் தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும், என்றும் […]

Continue Reading

தமிழ்நாட்டில் தலிபான்களுக்கு ஆதரவு! – உஷாரான உளவுத்துறை

ஆப்கான் நாட்டு படைகளை வீழ்த்தி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட நாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை வரவேறு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரிந்துள்ளனர். இப்படி, தலிபான்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டவர்களின் விவரங்களை தமிழக உளவுத்துறை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading

இளைஞரை காலால் உதைத்த போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட்

காவலர்களிடம் அநாகரீகமாக நடந்துக் கொள்ளும் பொது மக்களின் செயல்களை வீடியோ எடுக்கும் காவல்துறையினர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவதோடு, அந்த வீடியோ ஆதாரத்தின் மூலம், அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்கின்றனர். அதேபோல், பொதுமக்களிடம் மோசமாக நடந்துக் கொள்ளும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரும்பாக்கத்தில் கடையில் வேலை செய்யும் சபீர் என்ற இளைஞரை மாஸ்க் அணியவில்லை என்பதால், பெரும்பாக்கம் போலீஸ் எஸ்.ஐ காலால் உதைத்திருக்கிறார். இந்த சம்பவம் […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலையை விவகாரம் – தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளனர். பூவுலகு சுந்தரராஜன் தலைமையில் தொல்.திருமாவளவனை சந்தித்தவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த தகவலை தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

தமிழ்நாட்டில் முதல் முறை! – கொடைக்கானல் நகராட்சிக்கு கிடைத்த பெருமை

கொரோனா மூன்றாவது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படிம் தமிழகத்தின் சில பகுதிகளில் சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அதே சமயம், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானல் நகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று […]

Continue Reading