’பிசாசு 2’-வில் இணைந்த அஜ்மல்!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு வேடம் ஒன்றி நடித்திருப்பதாக கூறப்படும் இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஜ்மல் ‘பிசாசு 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் நடித்திருக்கும் அஜ்மல், தற்போது இரண்டாவது முறையாக அவருடைய இயக்கத்தில் நடிக்கிறார்.

Continue Reading

அவதூறு வழக்கில் இருந்து இயக்குநர் பாலா விடுவிப்பு!

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் ‘அவன் இவன்’. ஆர்யா, விஷால், ஜனனி, மது ஷாலினி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இதற்கிடையே, இப்படத்தில் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், பாபநாசம் கரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக சித்தரித்ததற்காக இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. நீண்ட வருடங்களாக விசாரணை நடந்து வந்த இந்த […]

Continue Reading

பாலியல் வன்கொடுமை பற்றி பேசும் ‘மெய்ப்பட செய்’

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தயாரித்திருக்கும் படம் ’மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மதுனிகா அறிமுகமாகிறார். மற்றும் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின்,ஞான பிரகாசம் E G P, சூப்பர் குட் சுப்ரமணி, விஜய கணேஷ், தவசி, அட்டு முத்து,சிவா , ராஜ மூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் நடித்துள்ளார். நாட்டில் […]

Continue Reading

விஜேவும் நடிகருமான ஆனந்த கண்ணன் காலமானார்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90-களின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த கண்ணன், சிங்கப்பூர் வாழ் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஆனந்த கண்ணன், சென்னை வந்து சம் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியவர், சில திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் மீண்டும் சிங்கப்பூர் […]

Continue Reading

அருண் விஜய் படத்தில் நடித்த கங்கை அமரன்!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா, யோகி பாபு, ராஜேஷ், போஸ் வெங்கட், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் விஜயின் 33 வது திரைப்படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. பகலில் கதை காட்சிகளும், இரவில் சண்டைக்காட்சிகளும் என இரவு பகலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை […]

Continue Reading

நட்டி படத்தில் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்!

அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சைக்கோ த்ரில்லர் ஜானர் படமான இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதன்படி, ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் எற்கனவே இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஷில்பா மஞ்சுநாத் இப்படத்தில் இணைந்துள்ளார். ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களில் நாயகியாக […]

Continue Reading

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு! – போராட்டம் நடத்த கமல்ஹாசன் ஆலோசனை

கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ‘மாஸ்டர்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி காரைக்குடியில் தொடங்க உள்ளது. இதில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்தவும் […]

Continue Reading

தென்னிந்திய நடிகைகளில் நம்பர் ஒன்! – ராஷ்மிகாவுக்கு கிடைத்த பெருமை

‘கிரிக்பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதன் பிறகு தெலுங்குப் படத்தின் மூலம் ரசிகர்களின் பேவரைட் நடிகரானவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார். தற்போது பாலிவுட் சினிமாவிலும் பிஸியாகி இருப்பவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்பவர்களை கொண்ட தென்னிந்திய நடிகை என்ற பெருமை ராஷ்மிகா மந்தனாவுக்கு […]

Continue Reading

திருமணத்தை அறிவிக்கும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வரும் நயன்தாரா, நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடித்ததோடு, நயன் தயாரிக்கவும் செய்திருக்கிறார். ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருக்கும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், தனது தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவி-க்கு நயன்தாரா பேட்டி ஒன்று கொடுக்க வேண்டும், என்ற நிபந்தனையோடு தான் படத்தை […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் ஆண் குழந்தை பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தனது மகன் உருவத்தில் தனது அப்பாவை பார்ப்பதாக சிவகார்த்திகேயன் கூறினார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், முதல் முறையாக தனது குழந்தை புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சிவகார்த்திகேயன், தனது குழந்தையின் பெயரையும் வெளியிட்டுள்ளார். அவர் தனது குழந்தைக்கு ‘குகன் தாஸ்’ என்று பெயர் வைத்துள்ளார். குகன் என்பது முருக கடவுளாகும். தாஸ் சிவகார்த்திகேயனின் தந்தை […]

Continue Reading